3 கிலோ தங்கத்தை விட்டு சென்றவரை தேடும் சுவிஸ்

ரயில் பெட்டி ஒன்றுக்குள் விடப்பட்ட 3 கிலோகிராம் தங்கத்தின் உரிமையாளரை சுவிட்சர்லாந்து நிர்வாகம் தேடி வருகிறது.

278,368 டொலர் பெறுமதியான தங்கத்தை எடுத்துவந்த பயணி ஒருவர் செயின்ட் கல்லன் மற்றும் லுசர்ன் நகருக்கு இடையிலான ரயில் வண்டியில் விட்டுச் சென்றிருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த ஒக்டோபர் மாதம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதற்கு எவரும் இதுவரை உரிமை கோராத நிலையில், உரிமையாளரை கண்டுபிடிக்க சுவிஸ் அதிகாரிகள் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த சொத்துக்கு உரிமை கோருவதற்கு உரிமையாளருக்கு ஐந்து ஆண்டு அவகாசம் வழங்கப்படுவதாக லுசெர்ன் அரச வழங்கறிஞர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

யாராவது முன்வந்து இது தங்களுடைய தங்கம் என கூறினால் அதிகாரிகள் அதை எப்படி உறுதிப்படுத்துவார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

 

 

Tue, 06/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை