ரஷ்ய உளவு விமானங்களை இடைமறித்த அமெ. விமானம்

அலஸ்காவுக்கு அருகில் நான்கு ரஷ்ய உளவு விமானங்களை அமெரிக்க போர் விமானங்கள் இடைமறித்ததாக அமெரிக்க இராணுவம் சனிக்கிழமை அறிவித்தது.

ரஷ்யாவின் டீயு–142 விமானங்கள் அலஸ்காவின் அலுட்டியன் தீவுச் சங்கிலியின் 65 கடல் மைல்களுக்குள் நெருங்கி வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இந்த விமானங்கள் சர்வதேச வான் பகுதியில் இருந்ததாகவும் அமெரிக்கா அல்லது கனடா வான் பகுதிக்குள் நுழையவில்லை என்றும் வட அமெரிக்க வான் பாதுகாப்பு கட்டளையகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

அலஸ்காவுக்கு அருகில் அமெரிக்க விமானங்கள் ரஷ்ய விமானங்களை இடைமறிப்பது இந்த மாதத்தில் இது நான்காவது முறையாகும்.

ரஷ்யாவுக்கு அருகால் பால்டிக் மற்றும் கறுங்கடலுக்கு மேலால் பறந்த அமெரிக்காவின் இரு பி–1 குண்டுவீசும் விமானங்களை ரஷ்யா இடைமறித்த புகைப்படங்களை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு கடந்த மே 29 ஆம் திகதி வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

Mon, 06/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை