மாலாவி ஜனாதிபதி தேர்தலில் எதிர்க் கட்சி தலைவர் வெற்றி

மாலாவியில் இடம்பெற்ற மறு தேர்தலில் அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் லசரஸ் செக்வேரா வெற்றியீட்டியுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தேர்தலில் பதவியில் உள்ள ஜனாதிபதி பீட்டர் முதரிக்காவை தோற்கடித்து 58.7 வீத வாக்குகளுடன் செக்வேரா வெற்றியீட்டியதாக தேர்தல் ஆணையம் கடந்த சனிக்கிழமை அறிவித்தது.

2019 மே மாதத்தில் நடைபெற்ற தேர்தலில் முதரிக் வெற்றிபெற்றபோதும் தேர்தல் மோசடி காரணமாக மாலாவி அரசியலமைப்பு நீதிமன்றம் அந்த தேர்தல் முடிவை கடந்த பெப்ரவரி மாதம் ரத்துச் செய்தது.

“இது நீதி மற்றும் ஜனநாயகத்தின் வெற்றி” என்று இந்த வெற்றி பற்றி செப்வேரா குறிப்பிட்டார். அவரது ஆதரவாளர்கள் தலைநகர் லிலொங்வேயில் கூடி பட்டாசுகளை கொளுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் மதப் பிரசாரகராக இருந்த செக்வேரா எதிர்க்கட்சியான மாலாவி கொங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ளார். அவர் நேற்று புதிய ஜனாதிபதியாக பதவியேற்றார்.

Mon, 06/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை