ஆஸி. அரச நிறுவனங்களில் பாரிய இணையத் தாக்குதல்

அவுஸ்திரேலிய அரசாங்கம் மற்றும் நிறுவனங்களை இலக்கு வைத்து அரசு அடிப்படையிலான இணையத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டு வருவதாக அந்நாட்டு பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.

இந்த இணையத் தாக்குதல் அத்தியாவசிய சேவைகள் மற்றும் வர்த்தகங்கள் உட்பட அரசின் அனைத்து மட்டங்களையும் உள்ளடக்கி பரந்துபட்டிருப்பதாக அவர் தெரித்துள்ளார்.

இதன் பின்னணியில் இருப்பதாக நம்பப்படும் குறித்த நாடு பற்றிய விபரத்தை வெளியிட மறுத்த அவர், தனிப்பட்ட எந்தத் தரவுகளும் திருடப்படவில்லை என்று தெரிவித்தார்.

இந்தத் தாக்குதல்கள் பல மாதங்களாக இடம்பெற்றிருப்பதோடு அதிகரித்து வந்துள்ளது.

பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருப்பதாகவும் வர்த்தகங்கள் தமது பாதுகாப்பை அதிகரித்துக் கொள்ளும்படியும் பிரதமர் நேற்று அறிவித்தார்.

எனினும் இந்தத் தீங்குச் செயல் உலகெங்கும் இருப்பதாகவும் அவுஸ்திரேலியாவுக்கு தனித்துவமானது இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த இணையத் தாக்குதல் இடம்பெற்றிருக்கும் குறிப்பிட்ட சம்பவம் பற்றி மொரிஸன் குறிப்பிடாத நிலையில், “அரசாங்கம், தொழிற்துறை, அரசியல் அமைப்புகள், கல்வி, சுகாதாரம், அத்தியாவசிய சேவைகள் மற்றும் முக்கிய உட்கட்டமைப்புகள்” என பரந்ததாக உள்ளது என்று கூறினார்.

 

 

Sat, 06/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை