கொவிட்-19: ஆண்டிறுதியில் தடுப்பு மருந்தை உற்பத்தி செய்ய வாய்ப்பு

உலக சுகாதார அமைப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் கொவிட்-19 நோய்க்கான தடுப்பு மருந்தை மில்லியன் கணக்கில் உற்பத்தி செய்யமுடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தடுப்பு மருந்துத் தயாரிப்பை 2 பில்லியனுக்கு அதிகரிக்க இலக்குகொண்டுள்ளதாக நிறுவனத்தின் தலைமை ஆய்வாளர் சௌம்யா சுவாமிநாதன் கூறினார்.

அடுத்த ஆண்டு இறுதிக்குள் 3 வகையான தடுப்பு மருந்துகளைத் தயாரிப்பதும் நிறுவனத்தின் இலக்கு.

சுமார் 10 வகையான தடுப்பு மருந்துகள் இப்போது மனிதர்களிடம் சோதிக்கப்படுகின்றன.

அவை வெற்றிபெற்றால், வைரஸ் தொற்றை நேரடியாக எதிர்த்துப் போரிடுவோர், எளிதில் பாதிக்கப்படக்கூடிய மூத்தோர், தாதிமை இல்லம் போன்ற வைரஸ் பரவும் சாத்தியம் அதிகமுள்ள இடங்களைச் சேர்ந்தோர் தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொள்ள முன்னுரிமை தரவேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியது.

மலேரியா சிகிச்சைக்கான ஹைட்ரோசிகுளோரோக்குயின் மருந்துக்கு கொவிட்-19 நோயையோ, அதனால் ஏற்படும் மரணத்தையோ தடுக்கும் ஆற்றல் இல்லை என்பது தெளிவாகியிருப்பதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

பாதிப்பை முன்கூட்டியே அறிந்துகொண்டவர்களிடம் நோயின் தீவிரத்தைத் தடுக்கவோ, குறைக்கவோ அந்த மருந்து உதவுமா என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாக அது குறிப்பிட்டது.

 

Sat, 06/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை