அமெரிக்காவில் விமானத்தில் இருந்து பயணி வெளியேற்றம்

கொரோனா வைரஸுக்கு எதிரான முன்னெச்சரிக்கையாக முகக் கவசம் அணிய மறுத்த ஒருவர் அமெரிக்க ஏர்லைன்ஸ் விமான சேவை விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

நியூயோர்க்கில் இருந்து டலஸ் செல்லும் விமானத்தில் இருந்த பிராண்டன் ஸ்ட்ராக் என்பவருக்கு முகக் கவசத்தை அணிந்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும் அவர் அதனைச் செய்ய மறுத்ததை அடுத்து விமானத்தில் இருந்து வெளியேறும்படி கோரப்பட்டது என்று அந்த விமானசேவை குறிப்பிட்டுள்ளது.

எனினும் விமானத்தில் முகக் கவசம் அணிவதற்கான எந்தச் சட்டமும் இல்லை என்று ஸ்ட்ராக் தெரிவித்துள்ளார். இவ்வாறான முகக் கவசம் அணியும் சட்டம் இல்லாதபோதும் பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் விமானத்தில் முகக் கவசம் அணிவதை கடந்த மே நடுப்பகுதி தொக்கம் அமெரிக்க விமான சேவைகள் கட்டாயமாக கடைப்பிடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

Sat, 06/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை