வெட்டுக்கிளிகளை கோழித் தீனியாக பயன்படுத்தும் பாக்.

பாகிஸ்தானில் படையெடுத்துள்ள வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த, அவற்றைக் கோழிகளுக்கு இரையாக்கும் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் வெட்டுக்கிளிகளைச் சேகரிக்கும் கிராமவாசிகளுக்கு ரொக்கம் அளிக்கப்படும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சேகரிக்கப்படும் வெட்டுக்கிளிகள் பதப்படுத்தப்பட்டுப் பின்னர் கோழிகளுக்கான தீனியில் சேர்க்கப்படும்.

பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கப்படாத வேளாண் வகைகளைச் சாப்பிட்ட வெட்டுக்கிளிகளை மட்டுமே அதில் பயன்படுத்த முடியும்.

ஒரு கிலோகிராம் வெட்டுக்கிளிகளுக்குப் பாகிஸ்தானிய நாணயத்தில் 20 ரூபாய் வழங்கப்படுகிறது. ஓர் இரவில் சுமார் 10 டொலர் ஈட்ட முடிவதாக உள்ளுர்வாசிகள் கூறுகின்றனர்.

வெட்டுக்கிளிக் கூட்டங்களால் தங்கள் பயிர்கள் அழிக்கப்பட்டதை அடுத்து விவசாயிகள் பெரும் அளவில் இழப்பை எதிர்கொள்கின்றனர்.

புதிய திட்டத்தின் வழி, இழப்பை ஓரளவு ஈடுகட்ட முடிவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

முதலில் தயங்கிய விவசாயிகள் பின்னர் ஆர்வத்துடன் திட்டத்தில் பங்கேற்றனர். 20 தொன் வெட்டுக்கிளிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

கூடுதலான விவசாயிகள் திட்டத்தில் சேர்ந்ததைத் தொடர்ந்து, அவர்களுக்குக் கொடுப்பதற்கான நிதியில் பற்றாக்குறை ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினர். இந்தத் திட்டம் தற்போதைக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

Fri, 06/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை