உலக நன்மைக்காக தடுப்பூசி தயாரிப்பதில் சீனா தீவிரம்

உலக மக்களின் நன்மைக்காக தடுப்பூசியை உருவாக்க தீவிரமான முயற்சிகளை எடுப்போம் என்று சீனா தெரிவித்துள்ளது.

தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் வெற்றி ஏற்பட்டால் உலக நாடுகளுடனான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவோம் என்று பீஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அறிவியல், தொழில்நுட்ப அமைச்சர் வாங் ஷிகாங் தெரிவித்தார். “சீனா தடுப்பூசியை உருவாக்கிய பின்னர் உலக மக்களின் நன்மைக்காகப் பயன்படுத்தப்படும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.

அதே கூட்டத்தில் பேசிய துணை வெளியுறவு அமைச்சர், சீனா மற்ற நாடுகளுடனான எல்லை தாண்டிய போக்குவரத்து ஏற்பாடுகள் துரிதமாக்கப்படும் என்றார்.

கொரோனா வைரஸுக்கு எதிராகப் போராடும் நாடுகளுக்கு கப்பலில் பொருட்களை அனுப்பி வைத்து ஒரு பெரிய நாடாக சீனா பொறுப்புடன் நடந்துகொண்டதாகவும் அவர் கூறினார்.

 

Tue, 06/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை