கிணற்றுக்குள் விழுந்தவர் ஆறு நாட்களின் பின் மீட்பு

இந்தோனேசியாவின் பாலித் தீவில் 6 நாட்கள் கிணற்றில் மாட்டிக்கொண்ட பிரிட்டிஷ் ஆடவரை அதிகாரிகள் உயிருடன் காப்பாற்றியுள்ளனர்.

29 வயது ஜேக்கப் ரொபர்ட்ஸ் பாலியின் பெச்சாத்து கிராமத்தில் 4 மீற்றர் ஆழமுள்ள கிணற்றில் கண்டுபிடிக்கப்பட்டார். நாய் ஒன்று தம்மைத் துரத்தியதாகவும் அதனிடமிருந்து தப்பிக்க முயன்றபோது கிணற்றில் விழுந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

கிராமத்தின் ஒதுக்குப்புற பகுதியில் இருக்கும் கிணற்றிலிருந்து ஆடவரின் குரல் கேட்ட விவசாயி ஒருவர் அதிகாரிக்குத் தகவல் கொடுத்த பின்னர் ஜேக்கப் மீட்கப்பட்டார். ஆடவருக்குக் காலில் முறிவு ஏற்பட்டதாகவும் தற்போது அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.

அந்த கிணற்றில் நீர் உலர்ந்திருந்தபோதும் இளைஞனின் காலில் ஏற்பட்ட முறிவால் அவரால் அங்கிருந்து வெளியேற முடியாமல்போயுள்ளது. கிணற்றில் சிறிதளவு நீர் இருந்ததால் அவரால் உயிர் தப்ப முடிந்திருப்பதாக பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆறு நாட்களாக சாப்பாடு இல்லாமல் ஜேக்கப் மெலிந்துகாணப்பட்டதாகவும் காயமடைந்திருந்ததாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

 

 

Tue, 06/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை