ஸ்காண்டினேவிய நாடுகளில் அதிக அணுக் கதிர்வீச்சு பதிவு

ஸ்காண்டினேவியா நாடுகளில் பதிவாகி இருக்கும் அணுக் கசிவுப் பொருள் தமது அணு உலையில் இருந்து வரவில்லை என்று ரஷ்யா மறுத்துள்ளது.

வளிமண்டலத்தில் வழக்கமான அளவை விடவும் அதிகமான அணுக் கதிர்வீச்சு பதிவாவதாக பின்லாந்து, நோர்வே மற்றும் சுவீடன் நாடுகளின் அணுப் பாதுகாப்பு கண்காணிப்பகங்கள் அறிவித்துள்ளன.

தரவுகளை அவதானித்த பின் அந்த அணுப் பொருள் மேற்கு ரஷ்யா திசையில் இருந்து வந்ததாக நெதர்லாந்து பொதுச் சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

எரிபொருள் உறுப்பு ஒன்றில் ஏற்பட்டிருக்கும் சேதத்தால் இந்த கதிர்வீச்சு பதிவாக வாய்ப்பு இருப்பதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

எனினும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் ரஷ்ய அணுசக்தி அமைப்பு, வட மேற்கு லெனின் கிரேட் மற்றும் கோலாவில் உள்ள இரு அணு உலைகளும் வழக்கம்போல் செயற்படுவதாகவும் எந்தக் கசிவும் பதிவாகவில்லை என்றும் தெரிவித்துள்ளது. அணு உலை குறைபாடு, பணியாளர்கள் கவனக் குறைவு ஆகிய காரணங்களால் இதற்கு முன், 1986 இல் சோவிட் ஒன்றியத்திற்கு உட்பட்ட செர்னோபில் அணு உலையில் மிகப் பெரிய அளவில் அணு விபத்து ஏற்பட்டது.

 

Tue, 06/30/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை