சீனாவில் கன மழையால் மேலும் 12 பேர் உயிரிழப்பு

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 10 பேர் மாயமானதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மியானிங் கவுண்டியில் பெய்த கனமழையால் விவசாய நிலங்கள், வீதிகள், பாலங்கள், மேலும் பல கட்டுமானங்கள் சேதமடைந்தன. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்த நிலையில், யிஹாய் என்ற இடத்தில் தற்காலிக கூடாரங்கள் அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதேபோன்று சீனாவின் ஹூபே மாகாணத்தில் பெய்த கனமழையால், ஒன்றரை மீற்றர் உயரத்துக்கு வெள்ள நீர் கட்டுமானங்களுக்குள் புகுந்தது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தெற்கு சீனாவில் ஜூன் மாதம் ஆரம்பம் தொடக்கம் பெய்துவரும் கடும் மழையால் இடம்பெறும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் இதுவரை 78 பேர் வரை உயிரிழந்திருப்பதாக அவரச முகாமைத்துவ அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Tue, 06/30/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை