சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் வயது பதினாறு

அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு

சிறுவர்களை வேலைக்கமர்த்துவதற்கான வயதை 14 லிலிருந்து 16ஆக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்போவதாக தொழில் மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். இலங்கையில் சிறுவர்களை வேலைக்கமர்த்துவதை முற்றாக நிறுத்துவதற்கு தொழில் அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த அமைச்சர்,

மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக்களுக்கூடாக தொழிற் திணைக்களம் மற்றும் அதனோடிணைந்த நிறுவனங்களுடன் இணைந்து சிறுவர்களை வேலைக்கமர்த்துவதை முற்றாக நிறுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிறுவர்களை வேலைக்கமர்த்துவதற்கு  எதிரான சர்வதேச தினம் தொடர்பான நிகழ்வு தொழில் திணைக்களத்தில் இடம்பெற்ற போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்: பல தசாப்தங்களாக அனைவரும் நன்கு அறிந்த நிறுவனமாக தொழில் திணைக்களம் செயற்படுகிறது. நாட்டின் தொழிலாளர் சட்டத்தை பலமாக நடைமுறைப்படுத்துவதற்கு அந்தத் திணைக்களம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது. அவர்களின் தொழில் உரிமையைப் பாதுகாக்கவும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் அனைத்து நடவடிக்கைகளையும் அமைச்சு மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.(ஸ)

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 06/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை