கொரோனாவால் 395 மில். பேர் வறுமையில் தள்ளப்படும் அச்சம்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பால், உலக அளவில் மேலும் 395 மில்லியன் பேர் கடுமையான வறுமையில் தள்ளப்படுவர் என்று கணிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் நாள் ஒன்றுக்கு ஒரு டொலருக்கும் குறைவான தொகையுடன் வாழ்வோரின் எண்ணிக்கை ஒரு பில்லியனைத் தாண்டுமென மதிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாட்டு நிறுவனப் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில் அது பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு ஒரு டொலர் அல்லது அதற்கும் குறைவான தொகையுடன் வாழ்வோர், கடுமையான வறுமையில் வாடுவதாக உலக வங்கி வரையறுத்துள்ளது.

நாள் ஒன்றுக்கு ஐந்து டொலர் அல்லது அதற்கும் குறைவான தொகையுடன் காலம் தள்ளுவோரை, மிதமான வறுமையில் இருப்பதாக உலக வங்கி வகைப்படுத்துகிறது. நிலைமை மோசமானால், உலக அளவில் ஒன்று புள்ளி ஒன்று இரண்டு பில்லியன் பேர் மிக மோசமான வறுமையில் தள்ளப்படுவர் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் அதிகமானோர், இந்தியாவையும் ஆபிரிக்க நாடுகளையும் சேர்ந்தவர்களாக இருப்பர்.

Sat, 06/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை