மூன்று மாத மின் பாவனைக்கான ரூ. 2000 கோடி செலுத்தப்படவில்லை

கோவிட் 19 தொற்று காலப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் காரணமாக கடந்த 3 மாத காலத்தினுள் மின்சார சபைக்கு 2000 கோடி ரூபா பணம் கிடைக்க வேண்டியுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

பாவனையாளர்கள் மற்றும் நிறுவனங்களில் இருந்து இவ்வாறு கட்டணம் கிடைக்க வேண்டியுள்ளதோடு கட்டண பட்டியல்கள் முறையாக வழங்கப்படாததும் மானி வாசிப்போர் வீடுகளுக்கு செல்லாமையும் இதற்கு காரணமாக அமைந்துள்ளது.

இருந்த போதும் மின்சார சபை தொடர்ச்சியாக மின்சார வசதிகளை அளித்து வருவதோடு முறையாக மின்பட்டியல் விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.மக்களின் பொருளாதார நிலைமை மற்றும் வருமான வழிகள் குறைந்துள்ள நிலையில் தவணை அடிப்படையில் கட்டணத்தை செலுத்த சலுகை வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

மின்சக்தி எரிசக்தி அமைச்சில் நடைபெற்ற விசேட கூட்டத்திலே இது தொடர்பில் ஆராயப்பட்டது.(பா)

Fri, 06/19/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை