ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஏற்படுத்தப்பட்ட அனைத்து சதிகளையும் முறியடித்துள்ளோம்

ஜனாதிபதியை பாராட்டி பிரதமர், தேர்தலுக்கு தயாராகுமாறு அழைப்பு

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அரங்கேற்றப்பட்ட அனைத்து சதிகளையும் ஜனாதிபதி வெற்றிகரமாக முறியடித்தார்.

அவர் வழங்கிய அரசியல் தலைமைத்துவம் காரணமாகவே கொரோனாவை கட்டுப்படுத்த முடிந்துள்ளது என்று​ குறிப்பிட்ட பிரதமர்,நல்லாட்சி கால பொய்களையும் மோசடிகளையும் புறந்தள்ளி திறமைக்கு முன்னுரிமை வழங்க வாக்காளர்களுக்கு அவகாசம் கிடைதுள்ளதாகவும் அவர் கூறினார்.

2020 பொதுத் தேர்தல் தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பிரதமர் தனது ஆட்சியை போன்று ஜனாதிபதி கோட்டாபயவின் ஆட்சியின் கீழ் வெல்ல முடியாத சவால்களை வெல்ல முடியும் என்பதை தற்போதைய சூழ்நிலை உணர்த்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் தெரிவித்துள்ள அவர்,

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் சுமார் 9 மாத காலம் முழு நாடும் நிலைமாறு கால சூழலுக்கு முகங்கொடுத்துள்ளது. இவ்வாறான நிலை அரசியல்  வரலாற்றில் ஒருபோதும் உருவாகவில்லை. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் மேற்கொண்ட மாற்றம் முழுமையடைய பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படுவது அவசியமாகும்.

தமக்கு விரும்பிய அரசாங்கத்தை உருவாக்கும் மக்களின் ஜனநாயக உரிமைக்கு அவகாசம் எழுந்துள்ளது. எமது நாட்டை போன்று வியட்நாம்,தாய்லாந்து மற்றும் ஆசிய நாடுகளும் கொரோனாவை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளன. ஜனாதிபதி வழங்கிய அரசியல் தலைமைத்துவத்தின் காரணமாக இந்த வெற்றியை அடைய முடிந்தது.

ஜனாதிபதித் தேர்தல் வெற்றியின் பின்னர் கஷ்டமான சூழ்நிலை உருவானது.19 ஆவது திருத்தம் காரணமாக செயற்கை பெரும்பான்மையை பேண எதிரணிக்கு முடிந்தது. உள்நாட்டு வௌிநாட்டு சதி மூலமே நல்லாட்சி அரசாங்கம் உருவானது. 2019 தேர்தலில் தோற்றும் அந்த நிலைமை மாறவில்லை.

புதிய ஜனாதிபதி பதவி ஏற்ற பின்னர் பல்வேறு பொய்க்குற்றச்சாட்டுகள் பரப்பப்பட்டன.இந்த அனைத்து சதிகளையும் ஜனாதிபதி திறமையாக முறியடித்தார்.

முன்னாள் இராணுவ அதிகாரியின் கீழ் கொடுங்கோள் ஆட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது. ஜனாதிபதி செயலகத்தை சுற்றி சுதந்திரமாக ஆர்ப்பாட்டம் நடத்த இடமளித்தார்.

நல்லாட்சி அரசின் 5 வருட காலத்தில் ஆர்ப்பாட்டம் செய்தோரை அடக்கியவர்கள் இன்று நடக்கும் சிறு சம்பவத்தையும் பூதகரமாக காண்பிக்க முயல்கிறார்கள்.

கோவிட் 19 இனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 ஆயிரம் கொடுத்தோம்.ஆனால் அவர்களுக்கு 65 ஆயிரம் வழங்க வேண்டும் என நல்லாட்சி ஜனாதிபதி வேட்பாளர் கூறியிருந்தார்.பின்னர் அதனை 2 ஆயிரமாக குறைத்தார்.

இவர்களது ஆட்சியில் என்ன கொடுத்தார்கள்.

நல்லாட்சி பொய்களையும் மோசடிகளையும் ஒதுக்கவும் திறமைகளுக்கு முன்னுரிமை வழங்கவும் எதிர்வரும் பொதுத் தேர்தல் வாக்காளர்களுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. (பா)

Fri, 06/19/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை