கொவிட்-19: பிரான்ஸில் முடக்க கட்டுப்பாடுகளில் பெரும் தளர்வு

கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளில் பெரும் தளர்வுகளை கொண்டுவரும் அறிவிப்பை பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோன் வெளியிட்டுள்ளார்.

இதன்படி பிரான்சில் உணவகங்கள் மற்றும் சிறிய சிற்றுண்டிச்சாலைகள் மீண்டும் திறக்கப்படுவதோடு ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கு பயணிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனா வைரஸினால் மோசமாக பாதிக்கப்பட்ட முதியோர் இல்லங்களுக்கு தமது குடும்ப உறுப்பினர்களை பார்வையிட வரவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எனினும் பிரிட்டன் அல்லது ஸ்பெயினில் இருந்து பிரான்ஸ் வரும் பயணிகள் இரண்டு வார தனிமைப்படுத்தலுக்கு முகம்கொடுக்க வேண்டி உள்ளது.

ஜெர்மன், பெல்ஜியம், குரோசியா மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகள் ஐரோப்பிய எல்லைகளை நேற்று முழுமையாக திறந்தன.

வைரஸுக்கு எதிராக முதல் வெற்றியை பெற்றுவிட்டதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்தார். எனினும் வைரஸ் மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புப் பற்றியும் அவர் எச்சரித்தார்.

பிரான்ஸின் 194,000 பேர் வரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு 29,400க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். புதிய நோய்த் தொற்று சம்பவங்கள் அண்மைக் காலத்தில் மந்தமடைந்துள்ளன.

 

Tue, 06/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை