அமெரிக்கருக்கு ரஷ்யாவில் உளவு குற்றச்சாட்டில் சிறை

ரஷ்யாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் அமெரிக்க முன்னாள் கடற்படை வீரர் போல் வேலனுக்கு 16 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர் 18 மாதங்களுக்கு முன்னர் மொஸ்கோ ஹோட்டல் ஒன்றில் இருந்து யு.எஸ்.பி. பிளாஷ் டிரைவ் ஒன்றுடன் கைது செய்யப்பட்டார். அந்த சாதனத்தில் அரசாங்கத்தின் இரகசியங்கள் அடங்கி இருந்ததாக பாதுகாப்பு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் இரகசிய தகவல்களை பெற்றதாக மொஸ்கோ நீதிமன்றத்தில் அவர் குற்றங்காணப்பட்டுள்ளார்.

பிரிட்டன், கனடா மற்றும் அயர்லாந்து பிரஜையாகவும் இருக்கும் வேலன், தம் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்தபோதும் அந்த டிரைவரில் சுற்றுலாப் புகைப்படங்கள் இருந்தது என்று நினைத்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்தத் தண்டனை அமெரிக்க மற்றும் ரஷ்ய உறவில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்று ரஷ்யாவுக்கான அமெரிக்க தூதுவர் ஜோன் ஜே சுல்லிவன் தெரிவித்துள்ளார்.

 

 

Tue, 06/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை