தான்தோன்றீஸ்வரர் ஆலய திருவிழாவுக்கு 100 பேருக்கு அனுமதி

மாவட்ட செயலர் அறிவிப்பு

வரலாற்று சிறப்பு மிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவினை 100 பேருடன் செய்வதுக்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தெரிவித்தார்.

ஆலயத்தின் திருவிழா தொடர்பான ஊடக சந்திப்பு நேற்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதில் ஆலய முகாமைத்துவ சபையின் தலைவர் சி.கணேசபிள்ளை, போசகர் சி.சிவபாலகுரு ஆகியோர் கலந்துகொண்டனர்.

திருவிழா தொடர்பாக அரச அதிபர் மேலும் கூறுகையில்,

19ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டு 16 நாட்கள் திருவிழா நடைபெறும். வருடாந்த திருவிழாவினை சம்பிரதாய முறையில் தடைஇல்லாமல் மக்கள் கலந்து கொள்ளாதவாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மக்களின் நேர்த்திக் கடன்களை பிறிதொரு தினங்களில் செய்தால் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியும்.

12 நாட்கள் மக்கள் செறிவு இல்லாத விழாவாக சாதாரன பூசையாக நடைபெறும். இறுதி 4 நாட்கள் மக்கள் அதிகளவில் வருவார்கள் என்று எதிர்பாக்கின்றோம். வேட்டைத் திருவிழா, சப்பறத் திருவிழா,தேர்த் திருவிழா,தீர்த்தத் திருவிழா மக்கள் வருவார்கள் என்று எதிர்பாக்கின்ற காரணத்தினால் அதற்கான பாதுகாப்பினை வழங்க தீர்மானித்துள்ளதுடன் மக்கள் வரவை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வேட்டைத்திருவிழா நேர்த்திக்கடனுடன் வருபவர்கள் முற்றுமுழுதாக தடைசெய்யப்பட்டுள்ளனர்.

நிர்வாகம் மட்டும்தான் கலந்துகொண்டு திருவிழாவினை செய்வார்கள்.

தேர்திருவிழாவும் சிறிய தேரினை குறைந்த ஆட்களை வைத்துக்கொண்டு இழுப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

மாங்குளம் குறூப், புதுக்குடியிருப்பு நிருபர்கள்

Thu, 06/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை