சிவில் விமான சேவைகள் அதிகாரசபை விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்

சுற்றுலாத்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள செயலாளர் எஸ்.ஹெட்டியாரச்சி நேற்று முன்தினம் முதற்தடவையாக சிவில் விமானசேவைகள் அதிகாரசபைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டார். அவர் அங்கிருக்கும் அதிகாரிகளை சந்தித்து சிவில் விமானசேவைகள் அதிகாரசபையுடன் தொடர்புபட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.

அதிகாரசபையின் எதிர்கால திட்டங்கள், கொவிட்-19 காரணமாக விமான சேவைகளுக்கு ஏற்பட்டுள்ள சவால்கள், அந்த சவால்களை  வெற்றி கொள்ளும் முறைகள், வைரஸ் தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம் விமானசேவையை மீண்டும் ஆரம்பிக்கும் முறை, அலுவலகப் பணிகளை வழமைக்கு கொண்டு வருதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பிலும் அமைச்சின் புதிய செயலாளர் ஆராய்ந்தார்.

வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளிடமிருந்து கொவிட்-19 நாட்டுக்குள் பரவாமல் கட்டுப்படுத்த சிவில் விமானசேவைகள் அதிகாரசபையின் அதிகாரிகள் எடுத்த முயற்சிகளையும் அவர் இச்சந்தர்ப்பத்தில் பாராட்டினார். சுற்றுலாத்துறை மற்றும் விமானசேவைகள் அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.ஹெட்டியாரச்சி இலங்கை நிர்வாக சேவையில் 35 வருடகால அனுபவம் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லக்ஷ்மி பரசுராமன்

Tue, 05/26/2020 - 08:51


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை