ஜெர்மனி தேவாலயத்தில் முஸ்லிம்கள் தொழ வசதி

ஜெர்மனியின் சமூக இடைவெளி சட்டத்தை தமது பள்ளிவாசலில் கடைப்பிடிக்க வசதி இல்லாததால் பெர்லினில் உள்ள தேவாலயம் ஒன்று முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்கு வசதி அளித்துள்ளது.

கடந்த மே 4 ஆம் திகதி தொடக்க சமய பிரார்த்தனைகளை நடத்துவதற்கு ஜெர்மனி அனுமதித்தபோதும் வழிபாட்டாளர்கள் 1.5 மீற்றர் இடைவெளியை பேண கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இதனால் நகரின் நியுகோன் மாவட்டத்தில் இருக்கும் தார் அஸ்ஸலாம் பள்ளிவாசலில் சிறிய எண்ணிக்கையானவர்களுக்கே தொழுகை நடத்த முடியுமாக உள்ளது.

இதனால் புனித ரமழான் மாத இறுதி வெள்ளிக்கிழமை தொழுகையை நடத்துவதற்கு அங்கிருக்கும் மார்டின் லுதன் தேவாலயம் முஸ்லிம்களுக்கு வசதி அளித்துள்ளது.

“ரமழானில் மகிழ்ச்சியை கொண்டுதரும் நல்லதொரு சமிக்ஞையாக இது உள்ளது. இந்த நோய்த் தொற்று எம்மை ஒரு சமூகமாக உருவாக்கியுள்ளது.

பிரச்சினை மக்களை ஒன்று சேர்த்துள்ளது” என்று பள்ளிவாசல் இமாம் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

 

Mon, 05/25/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை