மட்டக்களப்பு நவகிரி, புளுகுநாவி பிரதேசங்களுக்கு இங்கினியாகல சேனநாயக்கா சமுத்திர நீர்

மட்டக்களப்பு மாவட்டத்தின் நவகிரி, புளுகுநாவி ஆகிய விவசாய பிரதேசங்களுக்கு இங்கினியாகல சேனநாயக்கா சமுத்திரத்தின் நீரை வினியோகிக்கப்பதற்கான ஏற்பாடுகளை தான் செய்துள்ளதாக அமபாறை மாவட்ட அரசாங்க அதிபர் வி.ஏ.எல்.பண்டார தெரிவித்தார்.

இதுபற்றி அறியப்படுவதாவது, மட்டக்களப்பு மாவட்டத்தின் பாலையடிவட்டை, நவகிரி, புளுகுநாவி தாந்தாமலைப் பிரதேசங்கள் சிறுபோக வேளாண்மைச் செய்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.

கடுமையான கோடை அடிப்பதால் குளங்கள் வரண்டு கிடக்கின்றன. இதற்கான நீர்ப்பாசனம் நவகிரிக்குளத்திலிருந்தும், புளுகுநாவிக்குளத்திலிருந்தும் வழக்கமாக கிடைத்த வருகிறது. இந்த வருடத்தில் கடும் வரட்சி நிலவியதால் குளங்கள் வரண்டு விட்டன. இதனால் இதனை நம்பி வேளாண்மைச் செய்கையில் ஈடுபட்ட அனேக விவசாயிகள் நட்டத்தை சந்திக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.

இதனை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவின் கவனத்திற்து கொண்டு வந்த போது அவர் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரை தொடர்பு கொண்டு நிலைமையை தெளிவுபடுத்தினார். அதனைத் தொடர்ந்து அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சேனநகயக்கா சமுத்திரத்தின் நீரை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு திறந்துவிட அனுமதி அளித்துள்ளார்.

இன்று சேனநாயக்கா சமுத்திரத்தின் நீர் மட்டக்களப்பு மாவட்டத்தின்  வேளாண்மைகளுக்கு திறந்தவிடப்படும். இவ்விடயத்தில் ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை எடுத்த இரண்டு மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கும் இப்பகுதி விவசாயிகள் நன்றி தெரிவிக்கின்றனர்.

புளியந்தீவு குறூப் நிருபர்

Thu, 05/07/2020 - 10:34


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை