16 ஆயிரம் பேரை ஆட்குறைப்பு செய்ய போயிங் நிறுவனம் முடிவு

உலகின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் நிறுவனம் 16 ஆயிரம் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய முடிவு செய்துள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட இந்நிறுவனம் போயிங் 777, மற்றும் 787, டிரிம்லைனர் உள்ளிட்ட பல்வேறு ரக பயணிகள் விமானத்தை தயாரித்து ஏற்றுமதி செய்கிறது.

தற்போது அமெரிக்காவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தால் அங்கு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து உற்பத்தி நிறுத்தப்பட்டது. விமான பயணத்தின் தேவையும் குறைந்தது. கடந்த முதல் காலாண்டில் இந்நிறுவனத்திற்கு 1.7 பில்லியன் டொலர் வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும், மேலும் விமான தயாரிப்புக்கான பணிகள் நிறுத்தப்பட்டதால் கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இதையடுத்து 16 ஆயிரம் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யும், உற்பத்தியையும் சற்று குறைக்கவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Sat, 05/02/2020 - 14:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை