வட கொரியாவில் யாருக்கு வாய்ப்பு?

அடுத்த தலைவர் யார் என்ற போட்டி மும்முரம்

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் உடல் நிலை என்ன என்பது குறித்து மர்மம் நீடித்து வரும் நிலையில் வட கொரியாவின் அடுத்த தலைவர் யார் என்ற போட்டி ஆரம்பமாகி உள்ளது.

மர்ம தேசமான வட கொரியாவின் சர்வாதிகாரி கிம் ஜாங் உன்  இதய பாதிப்பால் மரணப் படுக்கையில் இருப்பதாகவும் அவர் இறந்து விட்டதாகவும்  யூகங்கள் அடிப்படையில் செய்திகள் வெளியாகி வருகின்றன. கிம்மின் உடல்நிலை குறித்த உறுதியான தகவல்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில்  கிம்முக்கு அடுத்து  அவரது சகோதரி கிம் யோ ஜாங்க்(31) அந்தப் பொறுப்புக்கு வருவார் என கூறப்பட்டது.

இந்நிலையில்  வட கொரியாவின் நிறுவனர் கிம் இல் சுங்கின் கடைசி மருமகனும்  ஜனாதிபதியின் மாமாவுமான கிம் பியோங் இல் அடுத்த ஜனாதிபதி பொறுப்பை ஏற்பார் என  கூறப்படுகிறது. இவர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக  ஹங்கேரி  பல்கேரியா  பின்லாந்து  போலந்து உள்ளிட்ட நாடுகளில் துாதரகங்களில் உயர் பொறுப்பில் இருந்துள்ளார்.

 

Fri, 05/01/2020 - 11:19


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை