கிராம சேவையாளர்களின் பிரச்சினைகளுக்கு பிரதமர் உடனடி தீர்வு

கிராம சேவையாளர்கள் உட்பட பிரதேச பொதுச்சேவை அதிகாரிகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் பொருட்டு ஒவ்வொரு பொலிஸ் பிரிவிலும் ஒரு பொலிஸ் அதிகாரியை நியமிப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ துரித நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொலிஸ் மாஅதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்து வதற்கும் பாதிக்கப்படுவோருக்கு உதவும் பொருட்டும்  முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களின் போது வருமானம் இல்லாத அல்லது வருமானம் குறைந்த மக்களுக்கு  நிவாரண உதவிகளை பெற்றுக் கொடுக்க அரசு முன்னெடுத்த வேலைத் திட்டத்தை, தொடர்ந்து முன்னெடுக்கும் போது அதிகாரிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளதை  இந்த அதிகாரிகளின் தொழிற்சங்கங்கள் நேற்று முன்தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து எடுத்துக் கூறியபோது பிரதமர் இந்த நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானித்துள்ளார்.

கிராமப்புறங்களில் அதிகாரிகள் மக்கள் நலன்களை முன்னெடுக்க  செல்லும்போது பிரதேச பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்து அதற்காக நியமிக்கப்பட்டிருக்கும் பொலிஸ் உத்தியோகத்தரை அழைத்துச்  செல்வதன் மூலம் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள முடியுமென பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மக்களை சந்திக்க செல்லும்போது பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தும் பொருட்டு முகக் கவசம், கையுறைகளை கூடிய விரைவில் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் இங்கு உறுதியளித்துள்ளார்.

எம் ஏ எம் நிலாம்

Thu, 05/14/2020 - 14:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை