மாணவர் ஊட்ட உணவு, சுகாதார வசதிக்கு ரூ. 89 மில். நிதி

மாணவர் ஊட்ட உணவு, சுகாதார வசதிக்கு ரூ. 89 மில். நிதி-WFP Donates Rs89 Millions for School Students Food Project

பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கு உணவு வழங்கும் அராங்கத்தின் திட்டதிற்கு உதவும் வகையில், ஐ.நா. உலக உணவு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ரூபா 80 மில்லியனை வழங்குவதற்கு முடிவு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் நிலவும் நிலைமையைக் கருத்தில் கொண்டு சுகாதார பாதுகாப்பு, துப்புரவு வசதிகள் அவசிமான 100 பாடசாலைகளை அடையாளம் கண்டு, அவற்றில் சுகாதார வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு ரூபா 3 மில்லியன் நிதியுதவியை வழங்கவும் இதன் கீழ் இணக்கம் காணப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தவிர, உள்நாட்டு உணவுப் பொருட்கள் தொடர்பில் அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்களுக்கு அமைய, சுகாதார பாதுகாப்புடன் கூடிய உணவுகளை பாடசாலைகளிலேயே உருவாக்கும் திட்டத்தின் கீழ் ரூபா 6 மில்லியன் நிதியுதவியை வழங்க, உலக உணவுத் திட்டம் இணக்கம் தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சில் நேற்று (13) இடம்பெற்ற இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு, கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் டலஸ் அளகப்பெருமவின் தலைமையில், ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்டத்தின் (WFP) இலங்கைக்கான வதிவிட பணிப்பாளர் பிரண்டா பார்டன் (Brenda Barton) ஆகியோர் இவ்வுடன்பாட்டை மேற்கொண்டனர்.

இதில் கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்ரானந்த மற்றும் இராஜாங்க அமைச்சின் செயலாளர் ரஞ்சித் சந்திரசேகர உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Wed, 05/13/2020 - 14:33


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை