ஊரடங்கு சட்டத்தை பயன்படுத்தி சட்டவிரோதமாக கட்டடங்கள்

சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர் சுட்டிக்காட்டு

கொரோனா நோய்த் தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தைப் பயன்படுத்தி பல இடங்களில் அனுமதியற்ற சட்டவிரோதக் கட்டடங்கள் அமைக்கப்படுவதாக சாவகச்சேரி பிரதேச சபைத் தவிசாளர் க.வாமதேவன் தெரிவித்தார்.

அண்மையில் சாவகச்சேரி பிரதேச சபையில் நடைபெற்ற மாதாந்த அமர்வின் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார். மேலும் கூறுகையில்,

வட்டாரங்களில் ஊரடங்கு வேளையில் அமைக்கப்படுகின்ற சட்டவிரோதக் கட்டடங்கள் தொடர்பாக பிரதேசசபை உறுப்பினர்கள் கண்காணித்து சபைக்கு தகவல் வழங்க வேண்டும்.

ஊரடங்கு நேரத்தில் இடம்பெறுகின்ற இவ்வாறான சட்டவிரோதச் செயற்பாடுகளை கிராம உத்தியோகத்தர்கள் ஊடாகவும் தடுத்து வருகிறோம்.

நாடு இருக்கும் நிலைமையில் இவ்வாறான சட்டவிரோதச் சம்பவங்கள் கண்டிக்கத்தக்கது. அத்துடன் அண்மையில் சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் நிமலரோகன் வாள் வெட்டிற்கு இலக்கான சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மக்கள் பிரதிநிதிகளுக்கு கருத்து தெரிவிக்க பூரண சுதந்திரம் உள்ளது. ஆகவே உறுப்பினர் மீதான தாக்குதலை சபை வன்மையாகக் கண்டிக்கிறது என்றார்.

சரசாலை நிருபர்

Mon, 05/18/2020 - 10:41


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை