கலாநிதி சுக்ரியின் இழப்பு இஸ்லாமிய சிந்தனையில் பாரிய இடைவெளியை தோற்றுவித்துள்ளது

தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம் அதாஉல்லா

நாடறிந்த முஸ்லிம் கல்விமானான கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரியின் இழப்பு நவீன உலகின் இஸ்லாமிய சிந்தனையில் பாரிய இடைவெளியை ஏற்படுத்தியுள்ளதாக தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்துள்ளார். அன்னாரின் இழப்பு குறித்து தேசிய காங்கிரஸ் தலைவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது;

முஸ்லிம் இளைஞர்களின் கல்வி அறிவு, தொழில்வாய்ப்புக்களை கருத்திற்  கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஜாமியா நளீமிய்யா அரபுக் கலாசாலை, இக்ரஹ் தொழினுட்பக் கல்லூரிகளை ஆரம்பிப்பதில் மர்ஹூம் நளீம் ஹாஜியாருடன் இணைந்து கலாநிதி சுக்ரி ஆற்றிய பங்களிப்புக்கள் எமது சமூகத்தில் விலைமதிக்க முடியாதவை. இறுதி வரைக்கும் ஜாமியா நளீமிய்யாவின் பணிப்பாளராக இருந்து அவராற்றிய சேவைகளால் எத்தனையோ முஸ்லிம் இளைஞர்களின் கல்விக் கண்கள் திறக்க வைக்கப்பட்டுள்ளன.இறக்கும் வரையிலும் அன்னார் அறிவுப்பணி, கல்விப் பணிகளுக்கு ஆற்றிய பங்களிப்புக்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக.

அறிவியலில் அவர் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டார்.

சுக்ரி போன்றோரின் மார்க்கப் புலமை, விசாலமான பார்வை, ஆழ்ந்த அறிவுகளாலே இஸ்லாத்துக்கு எதிரான சக்திகளைத் தோற்கடிக்க முடியுமென்றும் தனது அனுதாபச் செய்தியில் தேசிய காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.

ராஜகிரிய குரூப் நிருபர்

Wed, 05/20/2020 - 08:55


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை