சீனாவுக்கு மீண்டும் கொரோனா ஆபத்து: தேசிய சுகாதார ஆணைக்குழு எச்சரிக்கை

சீனாவின் 10 மாகாணங்களில்  கடந்த இரண்டு வாரங்களில் உள்ளூர் தொற்று பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து மீண்டும் கொரோனா பரவும் ஆபத்து உள்ளதாக தேசிய சுகாதாரக் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

சீனாவின் தேசிய சுகாதாரத்துறை ஆணைக்குழுவின் செய்தி தொடர்பாளர் மீ பெங்  செய்தியாளர்களிடம் நேற்றுமுன்தினம் கூறியதாவது: சீனாவில் நேற்று முன்தினம்  மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மூவருமே வெளிநாட்டில் இருந்து சீனா திரும்பியவர்கள். காய்ச்சல்  இருமல் போன்ற எந்த அறிகுறிகளுமே இல்லாமல் தொற்று கண்ட13 பேரில் இருவர் வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள்.

நேற்று முன்தினம் மட்டும்  962 பேருக்கு  அறிகுறிகள் இன்றி  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில்  98 பேர் வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள். கடந்த 14 நாட்களில் 10க்கும் மேற்பட்ட மாகாணங்களில் அறிகுறிகள் எதுவும் இன்றி உள்ளூர் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இதன் மூலம்  கொரோனா வைரஸ் இன்னும் நிலை கொண்டுள்ளது தெரிகிறது. அது மீண்டும் பரவத் துவங்கும் அபாயமும் உள்ளது. இவ்வாறு  அவர் கூறினார்.

Wed, 05/06/2020 - 09:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை