கொரோனா: அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு சீனா பதிலடி

சீனா கொரோனா வைரஸை திட்டமிட்டு பரப்பியதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அரசு தொடர் குற்றச்சாட்டுகளை அடுக்கி வந்தது. இதற்கு தற்போது சீன அரசு பதில் அளித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்  மற்றும் அமெரிக்க மாநில செயலாளர் மைக் பாம்பியோ ஆகியோர் கொரோனா வைரஸை  சீனா திட்டமிட்டு பரப்பி அமெரிக்க பொருளாதாரத்தை முடக்கப் பார்க்கிறது என கடந்த சில நாட்களாக தொடர் குற்றச்சாட்டை முன்வைத்து வந்தனர்.

வூஹான் வைராலஜி ஆய்வுகூடத்தில் இருந்து சீன அரசு வேண்டுமென்றே கோவிட்-19 மாதிரியை கசியவிட்டு ஐரோப்பிய நாடுகள் வழியாக அமெரிக்காவுக்கு கொரோனாவைப் பாரப்பியது என அமெரிக்கா குற்றம்சாட்டி அதற்கு தங்களிடம் பல்வேறு ஆதாரங்களும் உள்ளன எனவும் தெரிவித்து இருந்தது. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது பலவிதமான வதந்திகளும் பரவி வந்தன. கொரோனா பாதிப்பு முடிவடைந்ததும் இரு நாடுகளுக்குள்ளும் போர் மூளும் அபாயம் ஏற்படும் என பலர் அச்சம் தெரிவித்தனர்.

இதனால் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பனிப்போர் நீடித்து வந்தது. தற்போது சீன அரசு அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ளது.அமெரிக்காவின் பிரபல ஏபிசி தொலைக்காட்சிக்கு அமெரிக்க மாநில செயலாளர் மைக் பாம்பியோ பேட்டி அளித்து இருந்தார்.

அதில் அவர் சமீபத்தில் சீனாவை கடுமையாக சாடி பேசி இருந்தார். சீனா மீது பொருளாதாரத் தடை கொண்டுவர வேண்டும் என அவர் தெரிவித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து சீனாவின் அரசு இதழான குளோபல் டைம்ஸ்-ல் பாம்பியோ ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சீனாவுக்கெதிராக அடுக்கி வருகிறார் என கூறி இருந்தது.

சீனா மீது குற்றஞ்சாட்ட தங்களிடம் ஆதாரம் உள்ளது என வாய் வார்த்தையால் கூறினால் போதாது. அதற்காக ஆதாரத்தை மக்கள் முன்னிலையில் காட்டி பேசவேண்டும். அமெரிக்கர்களை டிரம்ப் அரசு இவ்வாறு பேசி முட்டாள்கள் ஆக்கிவருகிறது. உண்மை என்னவெனில் பாம்பியோவிடம் சீனா மீது குற்றம்சாட்ட ஒரு நம்பகமாக ஆதாரமும் இல்லை என சீனா கூறியுள்ளது. மேலும்  சீன வெளியுறவுத்துறை அமைச்சு பத்திரிகைத் தொடர்பாளர் கெங் ஷாங் கூறுகையில்  அமெரிக்க அரசு மக்கள் இறப்பைத் தடுக்கத் தவறிவிட்டது. தனது தவறை மறைத்து மக்களை திசை திருப்பவே சீனாவை குற்றஞ்சாட்டி வருகிறது என்றார்.

Wed, 05/06/2020 - 09:51


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை