தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு ரூ.700 கோடி நட்டம்

தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தப்பட்ட மார்ச் 20ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதி வரை, பஸ் உரிமையாளர்களுக்கு சுமார் 700 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக, அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

தனியார் பஸ் சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பில் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சருக்கும், தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்திற்கும் இடையில் போக்குவரத்து அமைச்சில்  நாளை (12)  முற்பகல் 10.00 மணிக்கு கலந்துரையாடலொன்று  இடம்பெறவுள்ளதாக, அவர் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைய  சுகாதார முறையில் பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவர எதிர்பார்ப்பதாகவும், அவர் தெரிவித்தார்.

தற்போது சரிவைச் சந்தித்துள்ள தனியார் பஸ் போக்குவரத்து வர்த்தக நடவடிக்கைகளை மீண்டும் புத்துயிரூட்டுவது தொடர்பான நடவடிக்கைகள் தொடர்பில்  அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருவதற்கு எதிர்பார்ப்பதாகவும், அவர் தெரிவித்தார்.

ஒரு மாதத்திற்கு மேலாக பஸ் சேவைகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டதால், பஸ்களில் பல்வேறு கோளாறுகள் ஏற்பட்டுள்ளதாக பஸ்  உரிமையாளர்கள் பலர் விசனம் தெரிவித்துள்ளதாகவும், அவற்றை சரி செய்வதற்கும் எரிபொருள் நிவாரணம் தொடர்பிலும் கலந்துரையாட எதிர்பார்ப்பதாகவும், அவர் மேலும் தெரிவித்தார். 

Mon, 05/11/2020 - 17:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை