கொழும்பைச் சேர்ந்த 175 பேர் இரணைமடுவிலிருந்து வீடு திரும்பினர்

கொழும்பைச் சேர்ந்த 175 பேர் இரணைமடுவிலிருந்து வீடு திரும்பினர்-175 Civilians from Colombo Returned from the SLAF Quarantine Centre in Iranamadu

இரணைமடுவிலுள்ள இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 175 பொதுமக்கள் இன்று (11) வீடு திரும்பியுள்ளனர்.

இலங்கையில் COVID-19 பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு உதவும் வகையில் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸின் அறிவுறுத்தலின் பேரில் இலங்கை விமானப்படையால் இந்த தனிமைப்படுத்தல் மையம் நிறுவப்பட்டது.

கொழும்பைச் சேர்ந்த 175 பேர் இரணைமடுவிலிருந்து வீடு திரும்பினர்-175 Civilians from Colombo Returned from the SLAF Quarantine Centre in Iranamadu

இந்த தனிமைப்படுத்தல் மையத்திற்கு கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி வந்த கொழும்பு, வாழைத்தோட்டம், பண்டாரநாயக்க மாவத்தை, கொட்டாஞ்சேனை, தெமட்டகொட பகுதிகளைச் சேர்ந்த, 83 ஆண்களும் 91 பெண்கள் உள்ளிட்ட 175 பொதுமக்கள் இவ்வாறு வீடு திரும்பியுள்ளதாக கடற்படை விமானப் படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பைச் சேர்ந்த 175 பேர் இரணைமடுவிலிருந்து வீடு திரும்பினர்-175 Civilians from Colombo Returned from the SLAF Quarantine Centre in Iranamadu

இரணைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தின் அனைத்த செயல்பாடுகளும், கட்டளை அதிகாரி குறூப் கெப்டன் ரொஹான் பத்திரணவின் மேற்பார்வையில் விமானப்படையினால் நிர்வகிக்கப்படுகின்றது.

Mon, 05/11/2020 - 18:02

from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை