மடு கல்வி வலயத்தில் 21 வருடங்களின் பின் மாணவனொருவனுக்கு 9 ஏ சித்தி

மன்னார் மடு கல்வி வலயத்தில் க.பொ.தா சாதாரண தர பரீட்சையில் முதல் தடவையாக 9ஏ சித்தியை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார் ஆண்டான்குளம் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவன்  ரி.டேவதரன்.

மன்னார் மடுக்கல்வி வலயத்தில் 21 வருடங்களின் பின்னர் ஆண்டான் குளம் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவன் ரி.டேவதரன் 9 ஏ சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.

இம் மாணவன்  புலமைப் பரிசில் பரீட்சையிலும் 184 புள்ளிகளைப் பெற்று மாவட்ட ரீதியில் 2ஆம் இடத்தினையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. மடு கல்வி வலயத்தில் க.பொ.தா. சாதாரண தர பரீட்சைக்கு 400 மாணவர்கள் தோற்றியுள்ள நிலையில்  ஒரு மாணவன்  9ஏ சித்தி பெற்றுள்ளதோடு ஏனைய மாணவர்களும் சிறப்பான சித்தி பெற்றுள்ளனர்.

எனினும் இன்னும் அதிக முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம். வட மாகாண ரீதியில் 12 வலயங்களில் எமது வலயம் 67.2 புள்ளிகளைப்பெற்று 05ஆம் இடத்தில் உள்ளது. இன்னும் முன்னேற்றம் பெற பல திட்டங்களை வகுத்துள்ளோம் என மடுக்கல்வி வலய பணிப்பாளர் க.சத்தியபாலன் தெரிவித்தார்.

மன்னார் குறூப்  நிருபர்

Thu, 05/07/2020 - 09:55


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை