முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; கொரோனா கட்டுப்பாட்டு முறைகளுடன் எளிமையாக அனுஷ்டிக்கப்படும்

முள்ளிவாய்க்கால்  மனித   பேரவலத்தின் 11 ஆம் ஆண்டு நிகழ்வுகள் இவ்வருடம் எளிமையான முறையில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் கட்டுப்பாட்டு நடைமுறைகளை பின்பற்றி நடைபெறும் என ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.

இது குறித்து ஏற்பாட்டுக்குழு நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்விப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,  முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலைகளின் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி அன்று நடைபெறும். கொவிட் 19 பரவல் காரணமாக தற்போது நாட்டில் நடைமுறையில் உள்ள கட்டுப்பாட்டு நடைமுறைகள், சட்டங்கள் என்பவற்றிற்கு மதிப்பளித்து அவற்றைக் கடைப்பிடித்தபடி இவ் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படும்.

உள்ளூர் வளங்களை ஒன்று திரட்டிப் பயன்படுத்துவதன் மூலம் இந் நினைவேந்தல் எளிமையாகவும் உரியமுறைப்படியும் மேற்கொள்ளப்படும். இது தொடர்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு நிதி திரட்டல் நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடாது.

இந்நினைவேந்தல் நடவடிக்ககைகள் தொடர்பில் அனைத்துப் பொதுஅமைப்புக்கள், பொதுமக்கள் அனைவரையும் எம்முடன் இணையுமாறு அன்புரிமையுடன் கேட்டுக் கொள்வதுடன் நினைவேந்தல் தொடர்பான நிகழ்சி ஒழுங்குகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

முல்லைத்தீவு விசேட நிருபர்

Thu, 05/07/2020 - 09:39


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை