ட்ரம்ப் மீது கொவிட்-19 மருத்துவச் சோதனை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் இருவருக்கும் வைரஸ் தொற்று இல்லை என்று மருத்துவச் சோதனையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகையில் பணிபுரிந்த இராணுவ வீரர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானதை அடுத்து, அவர்கள் இருவரிடமும் நோய்க்கான மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஜனாதிபதி ட்ரம்ப், பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பில் இல்லை என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இனி தினமும் வைரஸ் தொற்றுக்கான பரிசோதனையைச் செய்துகொள்ளவிருப்பதாகக் கூறினார்.

டிரம்ப், பென்ஸ் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் ஊழியர்கள் அனைவரும் இனி அன்றாடம் சோதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது.

வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கும் துணைப் படையைச் சேர்ந்த இராணுவ வீரர் ஜனாதி பதி மற்றும் அவரது குடும்பத்தினரின் பல்வேறு தனிப்பட்ட பணிகளில் உதவியாளராக உள்ளார். இதில் வெள்ளை மாளிகையில் மாத்திரமன்றி ஜனாதிபதியின் பயணங்களின்போதும் அவரது உணவு மற்றும் பானங்களுக்கு பொறுப்பாக செயற்பட்டவராவார்.

Sat, 05/09/2020 - 13:43


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை