உலகின் பாதுகாப்பான இடமாக மாறியுள்ள அண்டார்டிகா கண்டம்

உலகெங்கும் கொரொனா வைரஸ் தொற்றின் பாதிப்பு நீடித்து வரும் நிலையில் அதன் பாதிப்பில் இருந்து முற்றாக பாதுகாக்கப்பட்ட பகுதியாக அண்டார்டிகா மாறியுள்ளது.

பூமியின் மிகக் குளிரான பிராந்தியமான அண்டார்டிகாவில் இதுவரை கொவிட்-19 தொற்று பதிவாகாத நிலையில் உலகின் பாதுகாப்பான இடமாக மாறியுள்ளது.

இந்தப் பிராந்தியத்திற்கு அருகாமையில் கப்பல் ஒன்றில் வைரஸ் தொற்று பாதிப்பை ஏற்படுத்தியபோதும் அதன் உறைந்த கரைகளை அடையவில்லை. தற்போது அங்குள்ள கடுமையான குளிர் காலநிலையால் ஏனைய பகுதிகளில் இருந்து முற்றாக துண்டிக்கப்பட்டிருக்கும் சூழலில் அந்தப் பிராந்தியம் உலகின் ஏனைய பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.

அண்டார்டிக்காவில் பெங்குயின், திமிங்கிலங்கள், கடல்சிங்கங்கள் மற்றும் அல்பட்ரோஸ் போன்ற விலங்குகள் கணிசமாக இருந்தபோதும் அங்கு மனிதர்களின் வாழ்விடமாக இல்லை. எனினும் விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை பெரும்பான்மையாகக் கொண்ட சுமார் 5000 பேர் 80 அல்லது அதற்கு மேற்பட்ட தளங்களில் உள்ளனர்.

Sat, 05/09/2020 - 13:36


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை