பொகவந்தலாவையில் கொரோனா விழிப்புணர்வு

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவ பிரதேசத்தை சுற்றிவுள்ள சுமார் 44 தோட்டங்களில் வாழும் 6046 குடும்பங்களைச் சேர்ந்த 23,862 பேருக்கு கொரோனா நோய் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டம் ஒன்றை பொகவந்தலாவ பொலிஸ் நிலையம், பிரிடோ அரச சார்பற்ற நிறுவனம் மற்றும் ஊடகவியலாளர்கள் இணைந்து நேற்று முன்னெடுத்துள்ளனர்.

‘வீட்டுக்கு வீடு விழிப்புணர்வு’ எனும் தொனிப்பொருளில் குறித்த வேலைத்திட்டத்தினை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு பிரிடோ நிறுவனத்தில் பணிபுரியும் பாலர் பாடசாலை ஆசிரியர்கள், தொண்டர் படையணி,தோட்ட இளைஞர்கள் ஆகியோரினதும் பங்களிப்பும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது தோட்டங்களில் காணப்படும் தனி வீடுகள் மற்றும் தொடர் குடியிருப்புக்களுக்கு வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி கொரோனா தடுப்பது தொடர்பாகவும், நோய் அறிகுறிகள் காணப்பட்டால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் வெளியிடங்களில் இருந்து வருகை தந்தவர்கள் இருந்தால் அறிவிப்பது தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

(ஹட்டன் விசேட நிருபர்)

Thu, 04/09/2020 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை