பெருந்தோட்ட பகுதிகளுக்கு துரிதகதியில் சுகாதாரச் சேவை

விசேட பொறிமுறையும் வகுப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் முகமாக அரசாங்கமும் சுகாதார துறையும் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவரும் வேளையில் பெருந்தோட்டப் பகுதிகளுக்கும் அதனை அண்டியுள்ள கிராமங்களுக்கும் தேவையான சுகாதார வசதிகளை துரித கதியில் மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளரும் பெருந்தோட்ட மனிதவள நிதியத்தின் முன்னாள் தலைவருமான சட்டத்தரணி பாரத் அருள்சாமி, மேலும் கூறியதாவது,

”ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ஷவின் விசேட செயல்திட்டத்தின் கீழ்  அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் எண்ணக்கருக்கமைய கடந்த வாரம் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜெயசிங்கவுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் பிரகாரம், கடந்த நன்கு வருடங்களுக்கு மேலாக பெருந்தோட்டப்பகுதிகளுக்கு வழங்கப்படாதிருந்த மருந்துகளை இனி  தங்குத்தடையின்றி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தோட்ட வைத்தியசாலைகளுக்குத் தேவையான அடிப்படை மருந்துகள் விநிநோயிக்கப்பட்டு வருகின்றன.

5 இலட்சம் பரஸிடமோல்ட் மாத்திரைகள் ஒரு இலட்சம் ப்ருபின் மாத்திரைகள் 2 இலட்சம்  வைட்டமின் மாத்திரைகள், 10 ஆயிரம் பண்டேஜ்கள் என ஆரம்ப கட்டமாக வழங்கப்பட்டுள்ளன.

அதேவேளை, கண்டி மாவட்டத்தின் சுகாதார பணிப்பாளர் வைத்தியர் நிதர்ஷனிவுடன்  மேற்கொண்ட கலந்துரையாடலில் கண்டி மாவட்டத்தில்,  தோட்ட மற்றும் கிராம பகுதிகளுக்கு  சேவைகள் வழங்கப்படும் பொறிமுறை பற்றி ஆராயப்பட்டன.

குறிப்பாக தோட்ட பகுதிகளில் வாழும் கிளினிக் நோயாளர்களுக்குத் தேவையான மருந்துகளைப் பெறுவதற்காக தோட்ட வைத்திய அதிகாரிகள் மற்றும் நலன்புரி அதிகாரிகளை ஈடுபடுத்துவதற்கும், தனியார் தோட்டங்கள் கிராம பகுதிகளில் கிராம சேவகர் மற்றும் தோட்ட முகாமையாளர் மூலமாக மாவட்ட வைத்திய அதிகாரி மற்றும் பொது சுகாதார அத்தியட்சகர் மூலமாக அருகில் உள்ள வைத்திய சாலையில் பெற்று தரும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றார்.

Sat, 04/11/2020 - 07:49


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை