மலையகத்தில் சாதாரண துணிகளில் தைத்த முகக்கவசங்களே அதிகளவு விற்பனை

பாதுகாப்பு உறுதிப்படுத்தல்கள் குறித்து கேள்வியெழுப்பும் மக்கள்

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முகக் கவசங்கள் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றது. இருப்பினும் எவ்வகையான முகவசங்கள் அணிவது தொடர்ப்பில் மக்களிடையே சந்தேகநிலை தொடர்ந்து வருகிறது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு என்;90 போன்ற முகக் கவசங்களை அணிவதே சிறந்ததது என சுகாதார தரப்பினர் தெரிவித்தாலும் மலையகத்தின் பிரதான நகரங்களின் மருந்தகங்களில் சாதாரண துணிகளில் தைக்கப்பட்ட முகக் கவசங்களே விற்பனை செய்யப்படுகின்ன. இவ்வாறு சாதாரண துணிகளால் தைக்கப்பட்ட முகக் கவசங்களை அணிவதால் பாதுகாப்பு இருக்குமா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.

அவ்வாறு விற்கப்படும் முகக் கவசத்திற்கு குறைந்தபட்ச விலையாக 35 ஷரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும் ஹட்;டன், கினிகத்தேனை  போன்ற பிரதான நகரங்களில் முகக் கவசங்களில் குறைந்தபட்ட விலையாக 50, 60 ஷரூபாவரை காணப்படுகிறது. தெருவோரங்களிலும் முகக் கவசங்கள் விற்பனை செய்யப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

எனவே பெருந்தோட்டங்களாகவிருந்தாலும் சரி ஏனைய பிரதேசங்களாகவிருந்தாலும் சரி முகக் கவசங்களை அணியும் போது வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு எவ்வகையான முகக்கவசங்களை அணிய வேண்டும் என்பதை சம்பந்தபட்ட தரப்பினருக்கு சுகாதார அமைச்சு அறிய தர வேண்டுமென மக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.

(கினிகத்தேனை நிருபர்)

Sat, 04/11/2020 - 07:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை