யாப்பு விதிகளுக்கு அமைய பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும்

யாப்பு விதிகளுக்கு அமைய பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும்-Parliament Must be Convened According to Constitution-Akila Viraj Kariyawasam

தேர்தல் திகதிக்கு முன் கொரோனாவுக்கு முற்றுப்புள்ளியே முக்கியம்

பாராளுமன்றம் கலைக்கப்பட்டு அதன் பின்னர் உரிய காலத்தில் தேர்தல் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு பின்னர் யாப்பு விதிகளுக்கு அமைய பாராளுமன்றத்தை கூட்ட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற விதிமுறைகளுக்கு அமைய உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுமாறு சபாநாயகரிடம் கோரியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

நேற்று (21) தேர்தல் ஆணைக்குழுவை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, ஜனாதிபதி சட்டத்தரணி டொனால்ட் பெரேரா சகிதம் தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரியவை சந்தித்தன்  பின்னர் அகில விராஜ் காரியவசம் ஊடகங்களுக்கு விளக்கமளித்தார்.

நாடு பாரிய நோய்த்தொற்றுக்குள் சிக்கி பெரும் இழப்புகளை சந்தித்துள்ள நிலையில் தேர்தலை நடத்துவது குறித்து தீர்மானிக்க இத தருணமல்ல தற்போதைய நிலையில் தேர்தலை நடத்தும் முயற்சி பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தலாம் முதலில் COVID-19 நோய் தொற்றை முற்றாக ஒழிப்பதற்கான நடவடிக்கையே முன்னெடுக்கப்பட வேண்டும். கொரோனாவுக்க   முற்றுப்புள்ளி வைப்பதற்கான  திகதியை நிர்ணயிக்கவேண்டும். தேர்தலை நடத்துவதற்கு அல்ல என்பதை வலியுறுத்தி உள்ளோம்.

அரசியலமைப்பின் தேர்தல் விதிகளுக்கு அமைய பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 52 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.  இந்த காலக்கெடு எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமையுடன் முடிவடைகின்றது.  அதற்கப்பால் ஜூன் மாதம் 2 ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும.  இந்த நிலையிலேயே தேர்தல் பிற்போடப்பட்ட ஜுன் மாதம் 20 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என மற்றொரு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் அரசியலமைப்பு விதிகளுக்கு முரணானது ஆகும்.  ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தல் நடத்தபடாத போனால் இயல்பாகவே மீண்டும் பாராளுமன்றத்தை கூட்ட வேண்டிய நிலை உருவாகிறது. இதனை சபாநாயகர் செய்ய வேண்டும். ஏனினில் நாட்டில் இன்று உருவாகியுள்ள கொரோனா நோய் தொற்று பரவல்,  நாட்டின் பொருளாதார மந்தம் பொதுத் தேர்தலை, நடத்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து முடிவுயெடுப்பதற்காக பாராளுமன்றம் கூட்டப்படே ஆக வேண்டும்.

இவற்றையெல்லாம் நாம் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடம் எடுத்துறைத்துள்ளோம். இது இவ்விதம் இருக்க அரசியல் கட்சிகளுடன் ஆலோசிக்க படாமலேயே தேர்தல் ஆணைக்குழு தன்னிச்சையாக புதிய திகதியை அறிவித்துள்ளார். இதனை நாம் கடுமையாக ஆட்சேபனை திறிவித்துள்ளோம்  இந்த திகதி அறிவிப்பு கூட சட்டத்திற்கு முரணாதாகும்

எனவே இன்றைய நிலையில் சபாநாயகர் அடுத்த வாரத்தில் பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் எனக் கூறிஉள்ளோம். இது தொடர்பில் கட்சி வெள்ளிக்கிழமை அன்று சபாநாயகருக்கு உத்தியோகபூர்வமாக கடிதம் ஒன்றை எழுத உள்ளோம் எனவும் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

எம் ஏ எம் நிலாம் 

Wed, 04/22/2020 - 11:43


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை