ஊரடங்கு வேளையில் சட்டவிரோதமாக மாட்டிறைச்சி விற்பனை செய்தவர் கைது

ஊரடங்குச் சட்டத்தை மீறி மாட்டு இறைச்சி விற்பனை செய்த நபர் ஒருவரை நாவலப்பிட்டி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கொரோனா தொற்று தொடர்பில் கண்டி மாவட்டம் அபாயகரமான வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்  சட்டவிரோதமாக மாடு ஒன்றை வெட்டி  இறைச்சியை விற்பனை செய்த நபர் ஒருவரை நாவலப்பிட்டி  குற்றத்தடுப்பு பொலிஸார் நேற்றுமுன்தினம் (15) கைதுசெய்துள்ளனர். நாவலப்பிட்டி குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலுக்கமைய மாட்டிறைச்சி  விற்பனை செய்த நபரிடம் இறைச்சி கொள்வனவு செய்வது போல் ஒரு உத்தியோகத்தர் அனுப்பப்பட்டே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை நாவலப்பிட்டி நீதவான் முன்னிலையில் முன்னிலைபடுத்துவதற்கான நடவடிக்கைகளை குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(நோட்டன்  பிரிட்ஜ் நிருபர்)

Fri, 04/17/2020 - 09:30


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை