சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியருக்கு வி.மறியல்

வீசா இன்றி சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த இந்திய பிரஜை ஒருவரை, எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

வெளிநாடு செல்வதற்கான அனுமதிப்பத்திரமோ அல்லது, வீசாவோ இன்றி காணப்பட்ட குறித்த இந்திய பிரஜை, நிலாவெளி மஸ்ஜின் வீதியில் நேற்று (16) கைது செய்யப்பட்டிருந்தார்.

57 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்ததாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சந்தேகநபரை திருகோணமலை நீதவான்  நீதிமன்றத்தில் நேற்று முன்னிலைப்படுத்தியதை தொடர்ந்து, இவ்விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
 

Fri, 04/17/2020 - 10:11


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை