கிம் ஜாங் உன் நலம் பெற அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வாழ்த்து

வட கொரியா அதிபர் பூரண நலம் பெற வாழ்த்துகிறேன் என கிம் ஜாங் உன் உடல் நலம் குறித்து வெளியான செய்தி தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறினார்.

'வடகொரிய ஜனாதிபதி  கிம் ஜாங் உன்னுக்கு சமீபத்தில்  இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும்  அவரது உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதிகளவு புகைப்பிடித்தல்,  உடல்பருமன் மற்றும் அதிக வேலை காரணமாக  கிம்முக்கு  இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டது. அவருக்கு  கடந்த  12ம் திகதி  ஹியாங்சன் கவுண்டி என்ற இடத்தில் வைத்து நடந்த அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதையடுத்து கிம் ஜாங் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்பட்டு வருகிறது.

இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெள்ளை மாளிகையில் அளித்த பேட்டியில், வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங்  உடன்  இதுவரை நல்ல நட்புறவு வைத்துள்ளேன். அவரது உடல் நலம் பற்றிய செய்திகள் எப்படி வெளிவந்தாலும் அவர் பூரண குணமடைய வாழ்த்துகிறேன் என்பதை மட்டும் என்னால் சொல்ல முடியும் "அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என நான் நம்புகிறேன் இவ்வாறு அவர் கூறினார்.

Thu, 04/23/2020 - 13:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை