எலிசபெத் பிறந்த நாளில் கொண்டாட்டம் இல்லை

கொரோனா வைரஸ் பரவலால்  பிரிட்டன் ராணி  இரண்டாவது எலிசபெத்தின் 94வது பிறந்த நாள் விழா உற்சாகமிழந்தது.

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ராணியாக  கடந்த  68 ஆண்டுகளாக இருப்பவர்  இரண்டாம் எலிசபெத். இவருக்கு நேற்றுமுன்தினம்  94வது பிறந்த நாள். வைரஸ் பரவலால்  பிரிட்டன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு  ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. வைரசால்  பிரிட்டனில்  1.25 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்து விட்டனர்.

பிரிட்டன் இளவரசர்  சார்ல்ஸ்,  பிரதமர்  ஜோன்சன் உட்பட பலரும்  கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தனர். இந்நிலையில்  ஆண்டு தோறும்  ராணி எலிசபெத்தின் பிறந்த நாள்  பிரிட்டனில் உற்சாகமாக கொண்டாடப்படுவது வழக்கம். மேலும்  21 குண்டுகள் முழங்க  ராணிக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடக்கும். கொரோனா பரவலால்  குண்டுகள் முழங்கும் நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் என  சில நாட்களுக்கு முன்  ராணி  எலிசபெத் அறிவித்திருந்தார். இந்நிலையில்  தன்  94வது பிறந்த நாளை  ராணி   எலிசபெத்  பெர்க் ஷயரில் உள்ள விண்ட்சர் அரண்மனையில்  கணவர் பிலிப்புடன்  மிக எளிமையாக நேற்றுமுன்தினம் கொண்டாடினார்.

Thu, 04/23/2020 - 13:09


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை