விமான நிலையங்களில் நிர்க்கதியான 33 இலங்கையர்களை அழைத்து வர முடிவு

விமான நிலையங்களில் நிர்க்கதியான 33 இலங்கையர்களை அழைத்து வர முடிவு-Government Decided to Bring Back 33 Sri Lankan Stranded in 13 Aiports

21 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் உள்ள விமான நிலையங்களில் சிக்கித் தவிக்கும் 33 இலங்கையர்களை நாட்டுக்கு அழத்து வர அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக, அமைச்சரவை இணை பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

இன்றையதினம் (09) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நேற்று (08) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது, அமைச்சர் தினேஷ் குணவர்தன முன்மொழிந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கமைய, ஓமான், துபாய், சிங்கப்பூர், எத்தியோப்பியா, துருக்கி, மலேசியா, புது டில்லி, மாலைதீவு, லண்டன், சீஷெல்ஸ், பப்புவா நியூ கினியா, எகிப்து, பெரு ஆகிய 13 சர்வதேச விமான நிலையங்களில் சிக்கியுள்ள இலங்கையர்கள் இவ்வாறு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, அவர் கூறினார்.

இலங்கைக்கு அழைத்து வரப்படும் அவர்கள், 21 நாள் தனிமைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும், அவர்களுக்கு இலங்கைக்கு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

Thu, 04/09/2020 - 11:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை