அத்தியாவசிய பொருட்களை கூடிய விலையில் விற்பனை செய்தால் அனுமதி பத்திரம் ரத்து

சப்ரகமுவ ஆளுநர் அதிரடி

இரத்தினபுரி மாவட்டத்தில் அதிதியாவசிய பொருட்களை கூடுதலான விலைக்கு விற்பனை செய்வோரை இனங்கண்டு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விற்பனை அனுமதி பத்திரங்களை இரத்து செய்ய நடவடிக்கையெடுக்கப்படும் என சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி மாவட்ட கொரோனா ஒழிப்பு குழு சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவவின் தலைமையில் ரத்தினபுரி மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று அவசரமாக கூடியது. இதன்போது பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

ஊரடங்குச் சட்டம்  நீக்கப்படும்போது சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள அனைத்து மொத்த விற்பனை நிலையங்களையும் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து கிராமங்கள் மற்றும் தோட்டப் பகுதிகளில் உள்ள வியாபார நிலையங்களுக்கு பற்றாக்குறையின்றி பொருட்களை கொள்வனவு செய்வதற்கும்  மாகாணத்தில் மூடப்பட்டுள்ள கூட்டுறவு விற்பனை நிலையங்களை மக்களின் தேவைகளுக்காக உடனடியாக திறப்பதற்கும் தீர்மானிக்கப்ட்டுள்ளது.

கூட்டுறவு விற்பனை நிலையங்களில் பருப்பு, செமன் என்பவற்றை கட்டுப்பாட்டு விலைக்கு விற்பனை செய்வதற்கும்,  மாகாணத்தில் வார சந்தைகளை உடனடியாக மூடுவதற்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், உதவி பணம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபாவை விரைவில் பெற்று கொடுப்பது குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.

(காவத்தை விசேட நிருபர்)

Thu, 04/09/2020 - 11:50


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை