கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் முகாமைத்துவ குழு ஒன்றுகூடல்

கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் முகாமைத்துவ குழு ஒன்றுகூடல்-Professor WD Lakshman Led Management Committee of COVID 19 Convenes

கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தை முகாமைத்துவம் செய்யும் முகாமைத்துவ குழு நேற்று (15) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஒன்றுகூடியது. இந்த நிதியத்தை தாபித்ததன் மூலம் ஜனாதிபதி எதிர்பார்த்த நோக்கத்தை அடைந்துகொள்வதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாக குழு கலந்துரையாடியது.

கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் முகாமைத்துவ குழு ஒன்றுகூடல்-Professor WD Lakshman Led Management Committee of COVID 19 Convenes

மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யு. லக்ஷ்மன் இக்குழுவிற்கு தலைமை வகிக்கின்றார். ஜனாதிபதி அலுவலகத்தின் தலைமை நிதி அதிகாரி ரவிந்திர ஜே.விமலவீர நிதியத்தின் செயலாளராக உள்ள அதேநேரம் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆடிகல, பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டியாரச்சி, சுகாதார அமைச்சின் செயலாளர் பத்ரானி ஜயவர்த்தன, பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க, இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் (மேஜர் ஜெனரல்) ஜீ விஜித ரவிப்பிரிய, இலங்கை சதோச நிறுவனத்தின் தலைவர் நுஷாட் எம். பெரேரா, ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் தலைவர் ஸ்ரீயான் டி சில்வா விஜயரத்ன, ஜனாதிபதி அலுவலகத்தின் மேலதிக செயலாளர் பீ.டீ. இந்திக எல். விஜேகுணவர்த்தன, ஜனாதிபதி அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் (சட்டம்) சட்டத்தரணி ஹரிகுப்த ரோஹணதீர, இலங்கை மத்திய வங்கியின் உதவி ஆளுநர் என்.டபிள்யு.ஜீ. ஆர்.டீ நாணயக்கார, இலங்கை வங்கியின் சிரேஷ்ட பிரதிப் பொது முகாமையாளர் டபிள்யு.பீ. ரஸல் பொன்சேக்கா, முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் எஸ்.சுவர்ணஜோதி, கொழும்பு உயர்நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சட்டத்தரணி ஜே.எம்.எஸ். ஜீ ஜயசுந்தர ஆகியோர் இக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள் ஆவர்.

இக்குழுவின் பணிகள்

  • கொரோனா ஒழிப்புக்கு தேவையான மருந்துகள், மருத்துவ ஆராய்ச்சி உபகரணங்கள் உள்ளிட்ட சுகாதார பாதுகாப்பு வசதிகளுக்காக நிதித் தேவைகளை வழங்குதல்.
  • சுகாதாரத் துறையிலும் அத்தியாவசிய மக்கள் சேவைகளை வழங்குவோரினதும் சுகாதார பாதுகாப்பு, சிறுவர்கள், பெண்கள், குறைந்த வருமானம் பெறும் வயோதிபர்கள், மாற்றுத்திறனாளிகள், இடர்நிலைக்குள்ளாகக் கூடியவர்களுக்காக நிதித் தேவைகளை வழங்குதல்.
  • தொற்றும் நோய் அபாயத்தை குறைப்பதற்கு பொதுச்சுகாதார முறைமை, கிராமிய மற்றும் தொலை மருந்தகங்கள், பரிசோதனை மற்றும் சிகிச்சை நிலையங்கள், சுகாதார சேவை முறைமை என்பன இணைப்பதற்கு தேவையான நிதியை வழங்குதல்.
  • தேசிய மூலப்பொருட்கள், வளங்கள், அறிவ,திறனை பயன்படுத்தி சுகாதார, துப்பரவேற்பாடு உற்பத்திகளின் புத்தாக்கத்திற்கும் தேசிய மருத்துவ துறைக்கும் உதவுதல்.
  • நாட்டின் மருத்துவ, விஞ்ஞான அறிவு மற்றும் அனுபவத்தை பயன்படுத்தி மேம்படுத்தப்படும் பாதுகாப்பு ஆடைகள் மற்றும் துப்பரவு ஏற்பாடு உற்பத்திகளை சர்வதேச சந்தைக்கு வழங்குவதை ஊக்குவித்தல்.
  • ஊடக மற்றும் கல்வி நிகழ்ச்சித்திட்டங்கள் மூலம் சேதன உணவு பயன்பாடு, சுகாதார வாழ்வொழுங்கை பேணுவதற்கான ஊக்குவிப்புகள்.
  • WHO, UNICEF, UNDP, WB, ADB மற்றும் இலங்கையின் முக்கிய அபிவிருத்தி பங்காளிகள், முகவர் நிறுவனங்களுடன் நிதி சேகரிப்பதை ஒருங்கிணைத்தல் ஆகியன நிதியத்திற்கு வழங்கப்பட்டுள்ள பணிகளாகும்.
Thu, 04/16/2020 - 16:33


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை