கொரோனாவை ஒழிக்காது தேர்தலுக்கு செல்வது அபாயகரமானது

கொரோனாவை ஒழிக்காது தேர்தலுக்கு செல்வது அபாயகரமானது-Holding General Election Will Make More Danger-Mangala Samraweera

இலங்கையில் 100 வீதம் கொரோனா வைரஸை ஒழித்துவிடாமல் பொதுத் தேர்தலை நடத்துவது பாரிய அழிவுக்கு இட்டுச்சென்றுவிடும் என முன்னாள் நிதி அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்

இது தொடர்பில்  ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,

இந்த ஆட்கொல்லி வைரஸைக் கட்டுப்படுத்த நிதி தேவை என்றால் உடனே பாராளுமன்றத்தைக் கூட்டி அதற்கான ஏற்பாடுகளை செய்யலாம் எனக்கூறிய மங்கள, அதைவிடுத்து, மக்களின் உயிர்களை வைத்து பொதுத் தேர்தலை செய்ய எனக்கு உடன்பாடில்லை என்றும் குறிப்பிட்டார்.

தேர்தல் நடத்துவதானால் மக்கள் ஒன்று கூடி நேரிடும். ஒரு குழு மாத காலம் மக்கள் செய்த அர்ப்பணிப்பு வீணாகிப் போய்விடும். கொரோனா தொற்று  நூறுவீதம் முடிவடைந்து விட்டது என சுகாதாரத் தரப்பும் உலக சுகாதார ஸ்தாபனம் அறிவிக்க வேண்டும்.. அதன் பின்னரே தேர்தல் குறித்து வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

எம்.எஸ். பாஹிம்

Thu, 04/16/2020 - 16:07


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை