நிந்தவூரில் 1,524 குடும்பங்களுக்கு ரூபா 5,000 கொடுப்பனவு

நிந்தவூரில் 1,524 குடும்பங்களுக்கு ரூபா 5,000 கொடுப்பனவு-Rs 5000 Allowance Distribution-Nintavur

4,212 சமுர்த்தி பயனாளிகளுக்கு முதற்கட்டமாக ரூ. 5,000

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக அன்றாடம் தங்களது தொழில் வாய்ப்புக்களை இழந்த நிந்தவூர் பிரதேச 1,524 குடும்பங்களுக்கு நாளைமறுதினம் (15) இழப்பீட்டுத் தொகையாக ரூபா 5,000/= வழங்கி வைக்கப்படவுள்ளதாக நிந்தவூர் பிரதேச செயலாளர் ரீ.எம்.எம். அன்சார் தெரிவித்தார்.

மேலும் அரசினால் சமுர்த்தி பயனாளிகளுக்கும், சமுர்த்திபெற தகுதியானவர்களுக்கும் ரூபா 5,000/= வழங்கப்பட்டுக் கொண்டு வருகிறது. அந்த வகையில் நிந்தவூர் பிரதேசத்தில் 4,212 சமுர்த்திப் பயனாளிகளுக்கு முதற்கட்டமாக ஐயாயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இவர்களுக்கு மேலதிகமாக ஐயாயிரம் ரூபா வழங்கப்படவுள்ளது. இது அவர்களுக்கு கொடையாக வழங்கப்படும் தொகையாகும்.

மேலும் நிந்தவூர் பிரதேசத்தில்  தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி வலயத்திலிருந்து 2,304 குடும்பங்களுக்கு தலா 5,000 ரூபா வழங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், இது தவிர அங்கவீனர்கள் மற்றும் முதியோர்களுக்கும் இவ்வாறான உதவித்தொகைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், நிந்தவூர் பிரதேச செயலாளர் ரீ.எம்.எம். அன்சார் மேலும் தெரிவித்தார்.

(நிந்தவூர் குறூப் நிருபர் -  சுலைமான் ராபி)

Mon, 04/13/2020 - 17:07


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை