மேலும் 02 பேர் குணமடைவு; கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் 65

மேலும் 02 பேர் குணமடைவு; கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் 65-02 More COVID19 Patients Recovered-Total Recovered 65

இன்று 02 பேர் குணமடைவு; 166 பேர் சிகிச்சையில்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இன்று (16) முற்பகல் 11.00 மணியளவில் தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 63 இலிருந்து 65 ஆக அதிகரித்துள்ளது. இது வரை இன்று எவரும் அடையாளம் காணப்படவில்லை

கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 238 ஆக காணப்படுகின்றது.

நேற்றையதினம் (15) 05 பேர் அடையாளம் காணப்பட்டதோடு, அவர்களில் 04 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து அடையாளம் காணப்பட்டதாகவும், இவர்களில் 02 பேர் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மற்றைய நபர் வீட்டிலிருந்து அடையாளம் காணப்பட்டதாக, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்திருந்தார். குறித்த நபர் கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்தவர் எனவும், அவர் தம்பதிவ யாத்திரைக்குச் சென்று கடந்த மார்ச் மாதம் 12ஆம் திகதி இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய 59 வயதான பெண் என அவர தெரிவித்தார். இப்பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சுகவீனமுற்ற நிலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது நேற்று (15) அடையாளம் காணப்பட்டுள்ளது.

அந்த வகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டுள்ள 238 பேரில் தற்போது 166 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 65 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் இது வரை 07 பேர் மரணமடைந்துள்ளனர்.

அத்துடன் மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 144 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

அடையாளம் - 238
குணமடைவு - 65
சிகிச்சையில் - 166
மரணம் - 07

மரணமடைந்தவர்கள் - 07
இலங்கையில் - 07

ஏப்ரல் 08 - ஒருவர் (07)
ஏப்ரல் 07 - ஒருவர் (06)
ஏப்ரல் 04 - ஒருவர் (05)
ஏப்ரல் 02 - ஒருவர் (04)
ஏப்ரல் 01 - ஒருவர் (03)
மார்ச் 30 - ஒருவர் (02)
மார்ச் 28 - ஒருவர் (01)
வெளிநாட்டில் - 15
பிரிட்டனில் - 09 பேர் (15)
அமெரிக்காவில் - 02 பேர் (06)
பிரான்ஸ் - ஒருவர் (04)
இத்தாலி - ஒருவர் (03)
மெல்பர்னில் - ஒருவர் (02) (அவுஸ்திரேலிய பிரஜாவுரிமை)
சுவிஸ்லாந்தில் - ஒருவர் (01)

குணமடைந்தவர்கள் - 65
ஏப்ரல் 16 - 02 பேர் (65)
ஏப்ரல் 15 - 02 பேர் (63)
ஏப்ரல் 14 - 05 பேர் (61)
ஏப்ரல் 13 - 00 பேர் (56)
ஏப்ரல் 12 - 02 பேர் (56)
ஏப்ரல் 11 - 00 பேர் (54)
ஏப்ரல் 10 - 05 பேர் (54) 
ஏப்ரல் 09 - 05 பேர் (49)
ஏப்ரல் 08 - 02 பேர் (44)
ஏப்ரல் 07 - 04 பேர் (42)
ஏப்ரல் 06 - 05 பேர் (38)
ஏப்ரல் 05 - 06 பேர் (33)
ஏப்ரல் 04 - 03 பேர் (27)
ஏப்ரல் 03 - 03 பேர் (24)
ஏப்ரல் 02 - 00 பேர் (21)
ஏப்ரல் 01 - 04 பேர் (21)
மார்ச் 31 - 03 பேர் (17)
மார்ச் 30 - 03 பேர் (14)
மார்ச் 29 - 02 பேர் (11)
மார்ச் 28 - 02 பேர் (09)
மார்ச் 27 - ஒருவர் (07)
மார்ச் 26 - 03 பேர் (06)
மார்ச் 25 - ஒருவர் (03)
மார்ச் 24 - 00 பேர் (02)
மார்ச் 23 - ஒருவர் (02)
பெப் 19 - 01 (சீனப் பெண்)

கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை - 238
ஏப்ரல் 15 - 05 பேர் (238)
ஏப்ரல் 14 - 15 பேர் (233)
ஏப்ரல் 13 - 08 பேர் (218)
ஏப்ரல் 12 - 11 பேர் (210)
ஏப்ரல் 11 - 02 பேர் (199)
ஏப்ரல் 10 - 07 பேர் (197)
ஏப்ரல் 09 - ஒருவர் (190)
ஏப்ரல் 08 - 04 பேர் (189)
ஏப்ரல் 07 - 07 பேர் (185)
ஏப்ரல் 06 - 02 பேர் (178)
ஏப்ரல் 05 - 10 பேர் (176)
ஏப்ரல் 04 - 07 பேர் (166)
ஏப்ரல் 03 - 08 பேர் (159)
ஏப்ரல் 02 - 03 பேர் (151)
ஏப்ரல் 01 - 05 பேர் (148)
மார்ச் 31 - 21 பேர் (143)
மார்ச் 30 - 05 பேர் (122)
மார்ச் 29 - 02 பேர் (117)
மார்ச் 28 - 09 பேர் (115)
மார்ச் 27 - 00 பேர் (106)
மார்ச் 26 - 04 பேர் (106)
மார்ச் 25 - 00 பேர் (102)
மார்ச் 24 - 05 பேர் (102)
மார்ச் 23 - 10 பேர் (97)
மார்ச் 22 - 09 பேர் (87)
மார்ச் 21 - 06 பேர் (78)
மார்ச் 20 - 06 பேர் (72)
மார்ச் 19 - 12 பேர் (66)
மார்ச் 18 - 11 பேர் (54)
மார்ச் 17 - 14 பேர் (43)
மார்ச் 16 - 10 பேர் (29)
மார்ச் 15 - 08 பேர் (19)
மார்ச் 14 - 05 பேர் (11)
மார்ச் 13 - 02 பேர் (06)
மார்ச் 12 - 02 பேர் (04)
மார்ச் 11 - ஒருவர் (02)
ஜனவரி 01 - ஒருவர் (சீனப் பெண்) (01)

இலங்கையில் கொரோனா நோயாளிகள் பதிவான இடங்கள்

தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவின் அறிக்கை - ஏப்ரல் 16 மு.ப. 10.00 மணி

Thu, 04/16/2020 - 12:19


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை