அனைத்து நாடுகளுக்கும் உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தல்

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அனைத்து நாடுகளும் மருத்துவ சோதனையை தீவிரப்படுத்துவதே சிறந்த வழி என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

“சோதியுங்கள், சோதியுங்கள், சோதியுங்கள் என்ற சாதாரண செய்தியையே நாம் அனைத்து நாடுகளுக்கும் வழங்குகிறேன்” என்று உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதனோம் கெப்ரியேசுஸ் ஜெனீவாவில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் குறிப்பிட்டார்.

“சந்தேகத்திற்கு இடமான அனைவர் மீதும் அனைத்து நாடுகளும் மருத்துவ சோதனை செய்ய வேண்டும். இந்த உலகளாவிய தொற்றுக்கு எதிராக அவர்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு போராட முடியாது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய நாடுகள் முடக்கப்பட்டதுடன் அனைத்துலகப் பங்குச் சந்தை பெரிய சரிவை எதிர்கொள்ளும் வேளையில் அத்தகைய நடவடிக்கை அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Wed, 03/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை